சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் ‘கடாரவெற்றியின்’ ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமும். சிறப்பு மாநாடும்.
சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் கம்போடியாவின் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும்
சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமும். சிறப்பு மாநாடும் எதிர்வரும் நவம்பர் 22 மற்றும் 23 ,2025 ஆகிய திகதிகளின் நடைபெறும்
இடம் – சியிம்ரீப், அங்கோர்.
இம்மாநாட்டில் உலகமுழுவதுள்ள தமிழறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
இதையொட்டி
நவம்பர் 21 – 26 வரை ஆறு நாட்கள் பன்முக விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த 6 நாட்கள் விழாவிலும் பங்கேற்று அங்கோர்வாட் களப்பயணம் மேற்கொண்டு மாநாட்டு நிகழ்விலும் கலந்துகொள்வோருக்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன.
நவம்பர் 21 முதல் 26 வரை 6 தினங்கள் தங்குவதற்கு .ஐந்து நட்சத்திர விடுதி, உணவு, கம்போடிய விசா, பேருந்து, அங்கோர்வாட், ஆயிரம் லிங்கங்கள், நாம் குல்லென் அருவி,படகு சுற்றுலா மற்றும் இரண்டு தினங்கள் மாநாட்டு நிகழ்வில் பங்கேற்பு..
அனைத்திற்குமான மொத்தக் கட்டணம். அமெரிக்க டாலர் $400 மட்டுமே. (Excluding Air Ticket)
இம்மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த மாநாட்டில் பங்கெடுப்பதற்கும் பார்வையாளர்களாக கலந்து கொள்வதற்கும் இலங்கை. இந்தியா. மலேசியா . சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஆகியோரும் வரவேற்கப்பெறுகின்றனர்.
வரலாற்று நோக்கில் பல்லவர்களும், பாண்டியர்களும், சோழர்களும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரசாண்டும்,நட்புறவு பாராட்டியும் மக்களோடு கலந்து தங்களது கலை, சிற்பம்,கோவில், பண்பாடு ஆகியவற்றை நிறுவி பெரும் பண்பாட்டுப் புரட்சியும்,வணிகத் தொடர்பும் செய்திருந்தனர்.மாநாட்டுத் தொடர்பானக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
angkorthamizhsangamtn@gmail.com
அனுப்ப வேண்டிய கடைசித் தேதி:
30.09.2025
மேலும் தேவையான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
திருமதி தாமரை சீனுவாசராவ்
வாட்ஸ்அப்: +91 9489902060
இரா. ஞானசேகரன்
துணைத் தலைவர்
வாட்ஸ்அப்: +855 81 41 21 79