சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் நல்லூரடியில் போராட்டம்!

Share

வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் தலைவர் தரணீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், , தேசிய மகா சபையினர், முஸ்லீம் சகோதரர்கள், கிழக்கு மாகாண ஐயப்ப சுவாமி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். அங்கு கலந்து கொண்டு தங்களை விளம்பரப்படுத்த முனைந்த ‘ஊழல்’ தமிழ் அரசியல்வாதிகள் இருவர் ஏற்பாட்டாளர்களால் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களில் ஒருவர் மைத்திரி மகிந்தா காலத்தில் சாராய லைசன் பெற்று தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு விற்பனை நிலையங்களை நடத்திவருபவர் எனவும் அவரது சகோதரரும் இவரைப் போலவே மீண்டும் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ‘அவா’ வில் ஆங்காங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் அழையா விருந்தாளிகளாக நுழைபவர்கள் எனவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி 22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வழிகோல வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் கோரிக்கை. முன்வைக்கப்பட்டது.

அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மகஜரும் கையளிக்கப்பட ஏற்படாடு செய்யப்பட்டது.

நல்லை ஆதீனத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது பேரணியாக யாழ். இந்திய துணை தூதரகம் வரை செல்கிறது. பாரதப் பிரதமருக்கான கோரிக்கை மகஜர் தூதரகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் தலைவர் தரணீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், , தேசிய மகா சபையினர், முஸ்லீம் சகோதரர்கள், கிழக்கு மாகாண ஐயப்ப சுவாமி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். அங்கு கலந்து கொண்டு தங்களை விளம்பரப்படுத்த முனைந்த ‘ஊழல்’ தமிழ் அரசியல்வாதிகள் இருவர் ஏற்பாட்டாளர்களால் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களில் ஒருவர் மைத்திரி மகிந்தா காலத்தில் சாராய லைசன் பெற்று தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு விற்பனை நிலையங்களை நடத்திவருபவர் எனவும் அவரது சகோதரரும் இவரைப் போலவே மீண்டும் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ‘அவா’ வில் ஆங்காங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் அழையா விருந்தாளிகளாக நுழைபவர்கள் எனவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>