சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
புகழுடல் நாளை திங்கட்கிழமை(04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன
போராளி சாந்தனின் உடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தை அடைந்த போது அங்கு கூடிய மக்கள் கூட்டம் ஒரு எழுச்சியைக் காட்டியது
நீண்ட நாட் கனவு நிறைவேறவில்லை
நிம்மதி ஒருநாளும் இருந்ததே இல்லை
ஆனாலும்
காத்திருந்தாள் இந்த வீரத்தாய்..
அன்று தன் உதிரத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்தவள்
இன்று
தன் கண்ணீரை உதிர்த்து தன் சோகங்களையெல்லாம் கொட்டித் தீர்க்கின்றாள்
தன் கண்முன்னாள் வந்துறங்கும் புதல்வனை
ஒரு தியாகியாய்க் காண்கின்றாள்
இந்த ஒரு நாள் மட்டும் தான் அவன் தன் முன்னாள் உள்ளான் என்ற எண்ணமெல்லாம் அவளிடத்தில் இல்லை.
போராளி சாந்தனின் உடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தை அடைந்த போது அங்கு கூடிய மக்கள் கூட்டம் ஒரு எழுச்சியைக் காட்டியதாம்!