சாவகச்சேரியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு

Share

(11-04-2024)

சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது.

சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச்சென்ற ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸார் பொலிஸ் நிலையங்களுக்கும் சோதனைச் சாவடி களுக்கு தகவல் வழங்கினர்.

இதையடுத்து மன்னார் சோதனை சாவடியில் வைத்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளைத் திருடியவரும் கைது செய்யப்பட்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>