சாவகச்சேரி ஏ-9 வீதியில் காரும் மோட்டார் சைக்கிளும் விபத்து!

Share

பு.கஜிந்தன்

சாவகச்சேரி ஏ-9 வீதி , தபால் கந்தோர் வீதி சந்தியில் சற்றுமுன்னர் காரும் உந்துருளியொன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் உந்துருளியில் பயணித்தவர் காயங்களுக்குள்ளானார்.

அவரோடு இணைந்து பயணித்த பெண்மணியும் சிறுகாயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>