சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் – 10 பேர் மரணம்

Share

சிரியாவில் அதிபர் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதையடுத்து அந்நாட்டின் அதிபராக அகமது அல் ஷரா பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே, சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தெற்கு சிரியாவில் உள்ள ராணுவ கட்டமைப்புகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அசாத் ஆட்சி கவிழ்ந்தபோது சிரியாவில் ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் ரைப் டிமாஷ்கியு மாகாணம் குவாண்டனா மாவட்டம் பெட் ஜின் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதியை கைது செய்ய இஸ்ரேல் படையினர் முயன்றுள்ளனர். அப்போது, இஸ்ரேல் படையினருக்கும், உள்ளூர் ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சிரியாவை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் 6 பேர் காயமடைந்தனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>