சிறப்பாக இடம்பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பொறுப்பேற்கும் நிகழ்வு

Share

(மன்னார் நிருபர்)

(21.04.2023)

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(21) காலை 9 மணியளவில் பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கடந்த 7 வருடங்களாக அதிபரகாக கடமையாற்றிய அருட்சகோதரர் ரெஜினோல்ட் கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலை அதிபராக நியமனம் பெற்று சென்ற நிலையில் கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலை யில் கடந்த 5 வருடங்களாக கடமையாற்றிய அருட்சகோதரர் சந்தியாகு மன்/புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை அதிபராக இன்று(21) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

குறித்த கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர், அருட்சகோதரர் ரெஜினோல்ட் டிலாசால் சபை அருட்ச கோதரர்கள் ,அருட்சகோதரிகள் , கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலை உதவி அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>