ரஷிய தலைநகர் மாஸ்கோவின் கொலமா மாவட்டத்தில் சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணித்தனர். நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் , உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>