சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பின்னணி குரல் பணிகள் துவக்கம்

Share

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது. பராசக்தி என பெயரிடப்பட்ட இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான அடியே அலையே கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் படத்தின் பின்னணி பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு காணொளி வெளியிட்டு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ரவி மோகன் தனது கதாபாத்திரத்திற்கு பின்னணி செய்து வருகிறார். அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி அடுத்தாண்டு ஜனவரி 14 இல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>