சிவராஜ்குமார் நடித்த ‘பெயில் படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது

Share

சிவராஜ்குமார் நடித்த ‘பெயில் படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது.  கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், 1974-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீனிவாச கல்யாணம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில், இயக்குநர் பவன் வடேயார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெயில்’ திரைப்படத்தில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை கேவின் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சஞ்சனா ஆனந்த், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, ஜெயராம், சாய் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த நிலையில், ‘பெயில்’ படம் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>