சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் 20 நிமிடங்களில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். சீனாவின் வடமேற்கில் உள்ள கிங்ஹாய் மாகாணம் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியாகும். மேலும் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் சீனாவில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தில் அதிகாலையில் வெறும் 18 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது, காலை 11:16 மணி மற்றும் 11:34 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கங்கள், 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் முறையே 5.7 மற்றும் 5.8 ரிக்டர் அளவில் பதிவாகின. இந்த நிலநடுக்கங்கள், அப்பகுதியின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான, அண்டை மாகாணமான கான்சுவில் உள்ள லான்சூவையும் பாதித்தன. அந்நகரில் உள்ள வீடுகளுக்குள் விளக்குகள் ஆடின. மேலும் நிலம் அதிர்ந்தபோது செங்குத்துப் பாறைகளிலிருந்து புழுதி மேகங்கள் எழுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>