சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். தென் சீனாவின் குவாங்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒருசில பகுதிகளில் 90 சென்டிமீட்டருக்கும் மேல் அதி கனமழை பெய்தது. இதனால் நானிங் நகரில் உள்ள அணை நிரம்பியதுடன், திடீரென உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ஒரு அணை உடைந்த சம்பவத்தில் மட்டும் அதிகபட்சமாக 26 பேர் உயிரிழந்ததாக, அந்நகரின் துணை மேயர் தெரிவித்துள்ளார். பிற வெள்ள பாதிப்புகளிலும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளில் மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>