சீனாவில் கனமழை, நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு

Share

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பீஜிங்கின் மியுன் புறநகர் பகுதியில், 4,400-க்கும் மேற்பட்டோர் தொடர் மழை எதிரொலியாக, வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். கார்கள் மற்றும் லோரிகள் வெள்ள நீரில் மிதந்து வந்தன. குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கி விட்டன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கனமழை, நிலச்சரிவால் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 8 பேரை காணவில்லை. இந்த சூழலில், பீஜிங் மற்றும் 11 மாகாணங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு சீனாவில் இந்த கனமழை தொடரும் என கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சீனாவின் கிழக்கே ஷான்டாங் மாகாணத்தில் இந்த மாதத்தில் வெள்ளம் எதிரொலியாக 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காணாமல் போனார்கள். இதேபோன்று சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல்வேறு கார்கள் மலை பகுதியில் அடித்து செல்லப்பட்டன. 5 பேர் உயிரிழந்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>