சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்… அதிபர் ஜின்பிங்

Share

சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை குறிப்பதாக சீன மக்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கின் டவுன்டவுண் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு திடீரென வருகை தந்தார். அவரைக் கண்டதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உற்சாகமடைந்தனர். அங்குள்ள கடைவீதிகளில் நடந்து சென்ற அவர், வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து 600 ஆண்டுகள் பழமையான சீனாவின் வரலாற்றுச் சின்னமான லோங்புசி பகுதியை ஜின்பிங் சுற்றிப்பார்த்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>