சீனாவில் வரலாறு காணாத மழை – வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்

Share

தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள சின்சோ மற்றும் பெய்ஹாய் நகரங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஏப்ரல் மாத மழை பதிவாகி உள்ளதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 53.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஒரு மணிநேரத்தில் மட்டும் 14.7 செ.மீ. மழை கொட்டியதால், நகரின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வெள்ளம் மார்பளவு வரை உயர்ந்ததால், சின்சோ நகரின் குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், ரப்பர் படகுகள் மூலம் வீடுகளுக்குள் முடங்கிய சுமார் 200-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். வரலாறு காணாத மழையால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சீனாவில் இத்தகைய கனமழை மே மாத இறுதியில் பெய்யும் பருவமழையின் போதுதான் ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே தீவிரமான மழை பெய்து உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு குவாங்சி மற்றும் குவாங் டாங் மாகாணங்களில் மழையின் தாக்கம் நீடிக்கும் என்பதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>