சீனு ராமசாமியின் “இடிமுழக்கம்” திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். ‘இடிமுழக்கம்’ படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றது. ‘இடிமுழக்கம்’ படம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘லட்சியம்’ படத்தின் மறுபதிப்பு என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி “இடிமுழக்கம் மறுபதிப்பு படமல்ல. நானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரப்பரப்பான கதை. இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம்” என்றார்.
சீனு ராமசாமியின் “இடிமுழக்கம்” திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>