சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக மோதல் தொடர்ந்து நிலவி வருகிறது. ஆனாலும், வர்த்தக மோதலை தணிக்க இருநாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமான நிலையத்திற்கே நேரில் சென்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்க உள்ளார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பயணத்தின்போது நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுக்கூட்டத்திலும் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>