சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்தில் கடல் தொழிலாளி ஒருவரும் பரிதாபச் சாவு!

Share

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

29ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை, பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையைச் சேர்ந்த 63 வயதான கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் 30ம் திகதி அன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதன்படி, சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. இந்த தகவல; 30ம் திகதி வெளியானதாகும்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>