சுதுமலைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் டெங்குக்கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

Share

கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் சுதுமலைப் பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆகும். இதன் படி புதிதாக இடமாற்றம் பெற்று கடமையைப் பொறுப்பேற்ற பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலமையில் கிராம சேவேயாளர்கள் டெங்குத் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து வீட்டுத்தருசுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி இதுவரை 23 பேரிற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் நுளம்புக் குடம்பிகள் இனங்காணப்பட்ட நிலையில் 4 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு 4500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், ஒருவருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. பல வெற்றுக்காணிகளிற்கு எதிராக 7 நாள் தவணை வழங்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>