சுருக்குவலை மீனை நீதிமன்றம் கொண்டு செல்வதாக கூறி மன்னாருக்கு கொண்டு சென்ற அதிகாரி

Share

பு.கஜிந்தன்

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி தலை தூக்கி உள்ளதாக யாழ் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் இ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்துக்கான ஊடக மையத்தில் வியாழக்கிழமை 5ம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத தொழில்களால் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்கள் பிடிபட்டு அழிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடமராட்ச கிழக்கு சமாசம் உட்பட கடல்தொழில் அமைச்சருக்கும் நீரியல்வளத் திணைகள் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் கைது செய்யப்படுவர்களை முல்லைத்தீவு அதிகாரிகள் அவர்களை விளக்க மறியலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.படகுகளை தடுத்து வைக்கிறார்கள் ஆனால் வடமராட்ச கிழக்கு பகுதியில் உடன் விடுவிக்கிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளால் எமது கடற்பகுதியில் நாளாந்தம் சட்டவிரோத மீன்படி முறை அதிகரித்து வருகிறது.

முல்லைத்தீவில் இருக்கின்ற சமாச தலைவர்,நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நேர்மையானவர்கள்
ஆனால் எமது வடமராட்சி கிழக்கு சமாசம் மற்றும் நீதியல்வளத் திணைகள அதிகாரிகள் இவர்கள்தான் இங்கு சட்ட விரோத தொழில் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கிறார்கள் இவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இலங்கையின் அம்பாந்தோட்டையிலிருந்து மீனவர்கள் வடமராட்சி கிழக்கிற்கு வருகை தந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இவர்கள் வடமராட்சி கிழக்கு சமாசம் மற்றும் சங்கங்களின் ஆதரவுடன் இங்கே வருகிறார்கள்.

எமது கடல் பகுதியை விரைவில் அழித்தொழிக்க பெரும் சதி நடைபெறுகின்றது. இதற்கு அதிகாரிகளும் காரணமாக இருக்கிறார்கள்

யாழ். நீரியல்வளத் திணைக்கள அதிகாரியை பற்றி நன்கு தெரியும் அவர் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்ய மாட்டார் ஏன் என்றால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுருக்குலை மீனை நீதிமன்றம் கொண்டு செல்வதாக கூறி மன்னாருக்கு கொண்டு சென்றவர் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது

கடற் தொழில் அமைச்சர் இதுதொடர்பில் கவனம் எடுத்து வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத தொழிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>