சுவீடனில் பள்ளிக்குள் கத்தியுடன் சென்று தாக்குதல் நடத்திய இளைஞர் உயிரிழந்தார்

Share

மத்திய சுவீடனில் உள்ள ஒரு பள்ளியில், கத்தியுடன் நுழைந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு வடமேற்கே அமைந்துள்ள பாகர்ஸ்டா நகரில், பிரினெல் உயர்நிலைப் பள்ளியில் நேற்று பிற்பகல் 18 வயது உள்ள இளைஞர் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளார். பள்ளியில் அப்பொழுது 400 முதல் 500 மாணவர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்தது விரைந்து வந்த காவல்துறை கைது நடவடிக்கையின் போது அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள பள்ளிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்டவர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>