சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஆளும் அரசாங்கத்திற்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டு கிளர்ச்சியாக மாறியது. சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் லட்சக்கணக்கானவர்கள் உயிழந்துள்ளனர். இந்த நிலையில் சூடானில் வடக்கு டார்பூர் மாகாணம் அல்-பஷேர் நகரை குறிவைத்து துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள முகாமை குறிவைத்து ஏவுகணைகள், வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் 13 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>