சூர்யா நடிக்கும் “சீன்” படத்தின் பாடல் வெளியானது

Share

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் ‘ஆத்தி யார்ரா இவ’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியாகும் ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘சீன்’ படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி யார்ரா இவ’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜ்பிரியன் இப்பாடலை எழுதி பாடியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>