சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு

Share

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கலையரங்கம், கூட்டரங்கம், கருத்தரங்கம் மற்றும் செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நூலக வாசகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர், கழிப்பிட வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, வளாகத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் பால் அருந்தி தரத்தினை ஆய்வு செய்து வாசகர்களுடன் கலந்துரையாடினார். உடன் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தர மோகன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் பொது நூலகத் துறை இயக்குநர் எஸ்.ஜெயந்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அரசுத் தேர்வுகள் இயக்குநர் க.சசிகலா, தனியார் பள்ளிகள் இயக்குநர் எஸ்.சுகன்யா, அண்ணா நூற்றாண்டு நூலக முதன்மை நூலகர் காமாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>