சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்

Share

சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 19 பேருடைய பெயரை சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் ஏற்றுக் கொண்டது. அந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரை பரிசீலித்த மத்திய அரசு, 15 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு குடியரசு தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 நீதிபதிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 15 பேரும் பதவியேற்றுக்கொண்டனர். இதில், 5 நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் பதவியேற்றுக்கொண்டனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>