சென்னை, கடலூர், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்படுமென அமைச்சர் ராஜ்குமார் கூறினார். வீட்டுவசதி வாரியத்தால், சுயநிதி திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், சுயநிதி திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று 2026-2027 ஆம் ஆண்டு கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கை கூட்டத் தொடரின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மாவட்டம் – அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எர்ணாவூர், கடலூர் மாவட்டம் – குண்டுசாலை, மதுரை மாவட்டத்தில் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டம் – திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் – வல்லன்குமாரவில்லை ஆகிய இடங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் கட்டப்படும். மேலும், இத்திட்டங்களை திட்டமிடும் முன், பொதுமக்களின் கேட்பினை அறிந்து, அவர்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் அமைப்பதற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்புகள் பெற ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தை அணுகி, தங்களின் கேட்பினை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை, கடலூர், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்படுமென அமைச்சர் ராஜ்குமார் கூறினார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>