செம்மணியில் 40 மனித எலும்புத் தொகுதியுடன் 2 ஆவது குழியும் அகழ்வு ஆரம்பம்.

Share

நடராசாலோகதயாளன்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 எலும்புக் கூடுகள் காணப்பட்டுள்ளதோடு இரண்டாவது புதைகுழி அகழ்வுப் பணியும் புதன்கிழமை 2ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அழ்வுப் பணிகளின் எட்டாம் நாள் அகழ்வு 2ம் திகதி இடம்பெற்றது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தமாக 40 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று வரையான அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் இருந்து என்புத் தொகுதிகளுடன் ஆடை மற்றும் நீலநிற யுனிசெப் துணி கைப்பை ஒன்று என்பவற்றுடன் சிறுவர்களிற்கான மகிழ்வு பொம்மை ஒன்றும் காணப்பட்டுள்ளது.

இதுவரை அகழ்வின்போது என்புத் தொகுதிக்கு அருகில் ஆடை, சிறிய கண்ணாடி வளையல்களும், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீலநிற துணி கைப்பைஒன்றும் அடையாளம் காணப்பட்டது.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் யுனிசெப் தொண்டு நிறுவனங்களால் நிவாரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மனிதப்புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதன்பிரகாரம் மண்மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக கொழும்பிலிருந்து ஒரு குழு வருகைதந்து மண் மாதிரிகளை பெற்றுக்கொண்டுள்ளது.

செய்மதிப்படங்கள் மூலம் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சில இடங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்றையதினம் அகழப்பட்டமை குறிப்பிடதக்கது.

நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடதக்கது.

அன்றைய தினம. புதிதாக அகழப்பட்ட இடத்தில் ஒரு அடி அகழ்வதற்கு முன்பாகவே பெண்களின் சேலை வெளிவருகின்றமை மேலும் சந்தேகத்தை ஏற்டுத்தியுள்ளது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>