செல்பி மோகத்தால் பறிபோன இரு உயிர்கள் குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் தவறி விழுந்த நிலையில் உயிரிழப்பு

Share

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் 1ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமையன்று செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர்.

இருவரும் கேணிக்குள் தவறி வீழ்ந்துள்ள நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>