செல்லமடா நீ எனக்கு வெளியீடு பதிவேற்றம்

Share

தாயை வெறுக்கும் மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் ஒன்றிணைத்து ஒரு உன்னதமான திரைக் காவியமாக உருவாகி இருக்கும் திரைப்படம் “செல்லமடா நீ எனக்கு.” இந்தப் படத்தில் வசீகரன், நேகா கதாநாயகன் நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் போஸ் வெங்கட், ‘பசங்க’ செந்தில், அமுதவாணன், மீரா கிருஷ்ணன், ரிஷா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.கலைமகள் புரொடக்சன் சார்பில் சிறுமடை லிங்கம் எஸ். இந்தப் படத்தை தயாரிக்க, ஆனந்த் சிவம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை செல்வா ஆர் மேற்கொள்ள தாஜ்நூர் இசையமைத்துள்ளார். படத்தின் கதை, வசனம், பாடல்களை மதுரா வேள்பாரி எழுதியுள்ளார். செல்லமடா நீ எனக்கு திரைப்படம் வருகிற மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>