சேலத்தில் அரசுப் பேருந்து மோதி 7 பேர் பலி

Share

சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் அரசுப் பேருந்து மோதி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அரியானூர் பகுதி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் சென்று கொண்டிருந்த பைக் மற்றும் டெம்போ மீது மோதி சாலையின் மறுபக்கம் சென்றது. இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற தாய், மகன் மற்றும் டெம்போவில் பயணித்த 11 மாதக் குழந்தை, 5 வயது சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து அறிந்த காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>