டச்சு நாட்டு சொகுசு கப்பல் ஒன்று கேப் வெர்தே கடலோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் 147 பயணிகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு ஹண்டா எனப்படும் அரிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் பாதிப்புகளால், 3 பேர் பலியாகி உள்ளனர். மீதமுள்ள 144 பேர் அச்சமடைந்து உள்ளனர். இது மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்றும் பரவ கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. பரிசோதனையில், 7 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்து உள்ளது. தென் அமெரிக்காவில் கப்பல் பயணிக்கும்போது, அதில் பயணிகள் ஏறுவதற்கு முன்பு, வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>