சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்திற்காக கம்போடியா சென்றுள்ள கனடா பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள்

Share

விமானநிலையத்தில் அவர்களை வரவேற்ற அங்கோர் தமிழ்ச்சங்க உப தலைரும் கம்போடிய குடிவரவு அதிகாரியும்…..


பலநாடுகளுக்கு பண்டைய கப்பல்களில் கடல்கடந்து பயணித்து அவற்றை தனது போர்த்திறனால் வெற்றி கொண்டு தமிழ்க் கல்வெட்டுகளையும் ஆலயங்களையும் உருவாக்கிய சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள கம்போடியா சென்றுள்ள கனடா உலகத் தமிழ் பண்பாட்டுஇயக்கத்தின் பிரதிநிதிகளாின உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் தலைவரும் அதன் அகில இயக்குனர் சபையின் சர்வதேச ஊடகப் பொறுபபாளரும் உதயன்பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான நாகமணி லோகேந்திரலிங்கம் மற்றும் அவரது துணைவியார் மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் பொருளாளரும் கனடா ‘தேசம்; பத்திரிகையின் வெளியீட்டாளரும் ‘ரூபம்’ இணையத் தொலைகாட்சியின் நிறுவனருமான சங்கர் சிவநாதன் ஆகியோரை கம்போடிய விமானநிலையத்தில் அங்கோர் தமிழ்ச்சங்க தலைவரும் வரலாற்றுத் துறை ஆர்வலருமான தங்கவேலு ஶ்ரீனீவாசராவ் மற்றும் தமிழ்ச்சங்க உப தலைவரும் மாநாட்டின் முக்கியஸ்த்தருமான ராஜசேகரன் ஞானசேகரன் மற்றும் கம்போடிய குடிவரவுத் திணைக்களத்தின் உயர் அதிகாரியும் இணைந்து வரவேற்றனர்.

அநேக தமிழ் மொழி மற்றும் சைவம்சார்ந்த கல்வெட்டுக்களும் பிரமாண்டமானதும் கலைச் சிற்பங்கள் கொண்டவையுமான ஆலயங்களும் நிறைந்து காணப்பெறும் இந்த புண்ணிய மண்ணாம் கம்போடியாவின் இயற்கை அழகும் ரசிக்கக் கூடியது.

கம்போடியாவின் சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025)

ஆகியவை கம்போடியாவின் சியம் ரீப் நகரில் 22ம் 23ம் திகதிகளில்நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் பேராளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்தும் சுமார் 300 தமிழ் மொழி மற்றும் பண்டைய வரலாற்றின் மீதான ஆர்வம் கொண்டவர்களும் கலந்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் உலகமுழுவதுள்ள தமிழறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>