“ஜனநாயகன்” படம் கசிந்த விவகாரம் – நடிகர் மாதவன் வேதனை

Share

தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜனநாயகன் படம் இணையதளத்தில் சட்ட விரோதமாக கசிந்துள்ளது. ரிலீசுக்கு முன்பே படத்தின் முழு நீள காட்சிகளும் இணையத்தில் கசிந்தது பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் விஜய் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேவிஎன் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் மாதவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: “இது மிகவும் மனவேதனை அளிக்கும் விஷயம். இந்த படத்தில் உழைத்த அனைவரின் கடின உழைப்பை மதிக்கவும். தயவுசெய்து சட்ட விரோதமாக இந்த படத்தை பார்க்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>