ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியா சென்ற அமைச்சர் டக்ளஸ்!

Share

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒரு வருடமாகின்ற நிலையில் முதல்முறையாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக இந்தியாவுக்கு செல்லும் அரச உயர்மட்ட குழாமில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இணைந்து பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் இந்த விஜயம் அமையவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அவர்களின் இழுவை மடித்தொழில் முறை பற்றி இந்திய பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரஸ்தாபித்து உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>