ஜம்மு-காஷ்மீரில் பேருந்து விபத்தில் 15 பேர் பலி – அதிபர், உமர் அப்துல்லா இரங்கல்

Share

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் காலை பயணிகள் பேருந்து ஒன்று மலையில் இருந்து உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அதிபர் திரவுபதி முர்மு, ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும். “துயரம் சூழ்ந்த இந்நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உறுதுணையாக நிற்கிறது; மேலும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>