ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டம் பதா கிராமத்தின் கொயனா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி அதை கடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், பதா கிராமத்தை சேர்ந்த 3 பேர் நேற்று மாலை ஆற்றை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது ஆற்றில் நீரில் அளவு திடீரென அதிகரித்தது. இதில் அடுத்து செல்லப்பட்ட 3 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒருவரின் உடல் இதுவரை மீட்கப்படவில்லை. அதை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>