‘ஜாலி ஓ ஜிம்கானா’ ஏப்.30ல் இணையதளத்தில் வெளியீடு

Share

சன் நெக்ஸ்ட் தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானாவை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச்சுகளும் இடம்பெறுகின்றன. திரையில் இந்த நட்சத்திரங்களை ரசிக்கும் நீண்ட கால சன் டிவி ரசிகர்களுக்கும், இவர்களின் இதுவரை காணாத புதிய பரிணாமத்தைக்காண ஆவலுள்ள இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் ஏற்ற ஒரு நிகழ்ச்சியாக இது அமைகிறது. பிரபல ஸ்டாண்ட் அப் காமெடி ஆர்டிஸ்ட் ஆன ஜெகன் கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, நட்சத்திரங்கள் தங்கள் பாதுகாப்பு அரண்களை தகர்த்து தங்கள் உண்மையான சுயத்துடன் வெளிப்படும் ஒரு தளர்வான மற்றும் சுதந்திரமான களத்தை உருவாக்குகிறது. தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பான நகைச்சுவை தருணங்கள் மூலம் ஜெகன் இந்த உரையாடலை வழிநடத்துவது மட்டுமல்லாமல்… அதை தூண்டி விட்டு, அந்த மேஜிக் நிகழ்வதை மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார். அவருடன் ஆபீஸ் கானா இசைக் குழுவும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஒரு துடிப்பான இசையை வழங்குகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் – ஐஸ்வர்யா ராஜேஷ் அல்லது துருவ் விக்ரம் ஆகியோரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறீர்களா..!? மீண்டும் ஒரு முறை யோசியுங்கள். ஜாலி ஓ ஜிம்கானா அவர்களின் பொதுவான முகத்திரையை விலக்கி, அதற்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. எந்த ஒரு திரைப்பட கதாபாத்திரமும் வெளிப்படுத்த முடியாத… உண்மையான கதைகள், எதிர்பாராத விசித்திர பழக்கங்கள் மற்றும் தன்னிச்சையான மகிழ்ச்சி தருணங்களை இந்நிகழ்ச்சி வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திரைப்பட நட்சத்திரங்கள்- முன்னணி இசையமைப்பாளர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் என பலரும் தங்கள் பாதுகாப்பு அரண்களை முழுமையாக கைவிட்டு, இயல்பாக கலந்து கொள்ளும் ஒரு ஈர்க்கக்கூடிய கலவையாக இந்நிகழ்ச்சி அமைகிறது. துருவ் விக்ரம்- ரவி மோகன்- தேவி ஸ்ரீ பிரசாத் – ஐஸ்வர்யா ராஜேஷ் – மிர்ச்சி சிவா- பிரேம்ஜி – ஹரிஷ் கல்யாண்- மகத் ராகவேந்திரா- வைபவ் – அஸ்வின் கக்குமனு மற்றும் டிஜிட்டல் உலகின் ரசிகர்களுக்கு பிடித்த கோபி – சுதாகர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>