ஜிம்பாப்வேயில் லோரி-மினிபேருந்து மோதி விபத்தில் 27 பாதிரியார்கள் உயிரிழந்தனர்

Share

ஜிம்பாப்வேயில் லோரி-மினிபேருந்து மோதி விபத்தில் 27 பாதிரியார்கள் உயிரிழந்தனர். மத்திய ஜிம்பாப்வேயின் ஹராரேவுக்கு தெற்கே 132 கி.மீ. தொலைவில் உள்ள சிவு அருகே நெடுஞ்சாலையில் மினிபேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் அந்த நாட்டின் இயேசு சபை துறவிகளான பாதிரியார்கள் மற்றும் இளம் பாதிரியார்கள் என மொத்தம் 34 பேர் சென்றனர். தேமாவில் இருந்து மவுமாவில் நடந்து வரும் தேவாலய கூட்டத்துக்கு இவர்கள் சென்றனர். நள்ளிரவில் வெளிநாட்டு பதிவெண் கொண்ட கனரக லோரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த அந்த பேருந்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது அந்த பேருந்து மீது லோரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் அந்த பேருந்து தீப்பிடித்து கருகி எரிந்து சாம்பலானது. இந்த கோர விபத்தில் 27 பாதிரியார்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>