ஜிவி பிரகாஷ் நடிக்கும் “வெக்கை” படத்தின் பதாகை வெளியானது

Share

அகிரன் மோசஸ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘வெக்கை’ திரைப்படத்தின் தலைப்பு பதாகை வெளியாகியுள்ளது. இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் டிவைன் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ஜிவி நடித்து முடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநரான அகிரன் மோசஸ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்நிலையில், சென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு, ‘வெக்கை’ என பெயரிட்டுள்ளதாக பதாகை வெளியிட்டு அறிவித்துள்ளனர். வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியும் நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த சில மாதங்களில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொதுவாக, நீலம் தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் சமூக கருத்துக்களைப் பேசுவதாகவும், பொது வெளியில் விவாதங்களை உருவாக்குவதாகவும் இருக்கும். இதனிடையே, ஜி.வி பிரகாஷ் இந்த கூட்டணியில் இணைய இருப்பதால், படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>