இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஹேப்பி ராஜ் படத்தின் முதல்காட்சி பதாகை வெளியான நிலையில் படம் குறித்த புதிய பதிவேற்றம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடல் “ஆடினே இருப்பேன்” வரும் 17ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “ஹேப்பி ராஜ்” படத்தின் முதல் பாடல் 17ம் தேதி வெளியீடு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>