ஜீவா நடிக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் பதாகை வெளியீடு

Share

ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது ப்ளாக் திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில், ஜீவாவின் 45 ஆவது படத்தை ‘தலைவர்’ படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல்காட்சி பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக அமைந்துள்ள இந்த பதாகை ரசிகர்களை கவர்ந்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>