ஜூன் 11-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேயென எக்ஸ் தளத்தில் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்

Share

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பலரும் என்னை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கிறார்கள். இந்த வதந்திகளும் ஊகங்களும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். எனது தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>