“ஜெட்லீ” படம் 25-ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியீடு

Share

இயக்குநர் ரித்தேஷ் ராணா இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் “ஜெட்லீ”. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சத்யா, வெண்ணிலா கிஷோர், மற்றும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்ற ரியா சிங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அஜய், ஹர்ஷா செமுடு, சுபலேகா சுதாகர், சீனிவாச ரெட்டி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வங்கி நிறுவனரான ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி துபாய்க்கு தப்பிச் செல்வதும், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் இப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், “ஜெட்லீ” படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 25-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>