ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஹிட் திரைப்படம் ‘தாம் தூம்’ மறு வெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ தரத்தில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இப்படம் மறு வெளியீடு ஆகிறது. இயக்குனர் ஜீவா இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>