ஜெய், பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது

Share

ஜெய், பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் கோலிவுட், டோலிவுட்டில் மும்மரமான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ‘டாக்டர்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எஸ்கேவுக்கு ஜோடியாக ‘டான்’ திரைப்படமும் ரூ100 கோடி வசூல் ஈட்டியது. சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷுக்கு ஜோடியாக ‘கேப்டன் மில்லர்’, ரவி மோகனுக்கு ஜோடியாக ‘பிரதர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் பீல் குட் படம் என்ற பெயரை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவுடன் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். தென் கொரியாவை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே பிரியங்கா மோகனுக்கு தற்போது தென் கொரியா சுற்றுலா துறையின் தூதராக நடிகை பிரியங்கா மோகனை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. பிரபல திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகிஸ்த நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கடைசியாக வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தங்களுடைய 29-வது திரைப்படத்தை அறிவித்துள்ளது. எம். எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு, நாசர், ராஜீவ் மேனன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூச் இசையமைக்கிறார். ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் பிரியங்கா மோகன் நிழல் புகைப்படத்துடன், ரத்தம், துப்பாக்கி, கூர்மையான ஆயுதத்துடன் டைப் ரைட்டர் மிஷின் ஒன்றும் உள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகக்கூடிய இப்படத்தில் பிரியங்கா மோகன் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>