ஜெர்மனியில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து – 3 பேர் உயிரிழப்பு

Share

ஜெர்மனியின் பேடன்-வூர்ட்டம்பேர்க் மாகாணத்தின் சிங்மெரிஜென் நகரில் இருந்து உல்ம் நகருக்கு நேற்று மாலை 6 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது.

அந்த ரெயிலில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பிபிரிட்ச் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>