ஜெர்மனியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்

Share

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நெதர்லாந்தில் இருந்து ஜெர்மனிக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 3 பேர் பயணித்தனர். விமான ஜெர்மனி வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தது. ஜெர்மனியின் மொச்சன்கல்பட்ச் மாகாணம் எர்கிலன்ஸ் ஜெர்டர்த் கிராமம் அருகே பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த  விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>