உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் ராணுவ ரகசியங்களை திருடும் உளவு வேலைகள் சமீபகாலமாக உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சீனா பிற நாடுகளின் உயர் தொழில்நுட்பங்களை உளவு பார்ப்பதாக மேலை நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிகளிடம் இருந்து ராணுவத்துக்கு பயன்படும் விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்ப ரகசியங்களை திருடி, சீனாவுக்கு அனுப்பிய கணவன், மனைவி இருவரை ஜெர்மனி காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதான தம்பதி கார் நிறுவன ஊழியர்கள் போலவும், மொழி பெயர்ப்பாளர்கள் போலவும் போலியாக நடித்து ஜெர்மனி பேராசிரியர்களை ஏமாற்றியுள்ளனர். மேலும், பேராசிரியர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, சீனாவுக்கு வரவழைத்து அங்குள்ள ராணுவ அதிகாரிகளுக்கு ரகசியமாக விரிவுரை கொடுக்க வைத்த அதிர்ச்சி உண்மையும் அம்பலமாகியுள்ளது.
ஜெர்மனி: சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>