ஞானச்சுடர் பட்டம் பெற்ற பொன்னாலை அன்னதான பிரபு குரு சுவாமிக்கு கௌரவிப்பு விழா!

Share

பு.கஜிந்தன்

பொன்னாலை அன்னதான பிரபு ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய குரு சுவாமியின் கௌரவிப்பு விழாவானது யூன் 1ம் திகத அன்றையதினம் பொன்னாலையில் நடைபெற்றது.

குரு சுவாமியான சைவத்திரு ப.தனீஸ்வர சுவாமிக்கு “ஞானச்சுடர்” பட்டம் வழங்கியதையிட்டு இந்த கௌரவிப்பு நிகழ்வானது நடைபெற்றது.

இதன்போது குரு சுவாமிக்கு பொன்னாடைகள் போர்த்து, மலர்மாலைகள் அணிவித்து, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

திரு. இ.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக மறவன்புலவு சச்சிதானந்தம் கலந்து சிறப்பித்ததுடன், கிராம சேவகர் திரு.சிவரூபன், சமூக மட்ட அமைப்பினர், முன்பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தனீஸ்வர சுவாமி, மாணவர்களுக்கான கற்றலுக்கான உதவிகள், வாழ்வாதார உதவிகள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>