விக்ரமின் மகன் துருவ், ஆதித்யா வர்மா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதலில் ஆதித்யா வர்மா படத்தில் நடித்தார். பின்னர் மகான் படத்திலும் தன் தந்தையுடன் சேர்ந்து நடித்தார்.
இதனையடுத்து பைசன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் அவர் கபடி வீரராக நடித்திருந்தார். இந்த படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பைசன் திரைப்படத்திற்கு பிறகு, துருவ் விக்ரம் யார் படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் பாபுவுடன் துருவ் விக்ரம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>